"தடையை மீறி வெளியே வந்தால் ஓராண்டு சிறை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதலமைச்சர் நாரயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்குவது மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்