மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மிரட்டப்படும் விவகாரம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேதனை

மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக வரும் செய்திகளை கேட்டு வேதனை அடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மிரட்டப்படும் விவகாரம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேதனை
x
மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக வரும் செய்திகளை கேட்டு வேதனை அடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், டெல்லி, நொய்டா, வாரங்கல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் காலனிகளில் வசிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோரை ஒதுக்கி வைக்கப்படுவதாக தகவல் வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றுக்கு அச்சப்பட்டு  குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஹர்சவர்த்தன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்