கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு புது சிக்கல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு புது சிக்கல்
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சிகிச்சையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள வாடகை வீட்டில் வசிக்கும் மருத்துவர்களை, வீட்டு உரிமையாளர்கள், வீடுகளை காலி செய்ய வலியுறுத்துவதாகவும், எனவே அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், மருத்துவர்கள், தங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக காவல்துறைக்கு வலியுறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்