நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை ஐந்தரை மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு,  டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் என்பவரது மனைவி, நீதிபதி தர்மேந்திர ராணாவிடம்,   மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் படி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என உத்தரவிட்டார். இதனிடையே, நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற சிபிஐ போன்ற விசாரணை அமைப்புக்கு உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதே போல், பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இதன் மூலம், நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேரும் நாளை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்