"குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க தேவையில்லை" - பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அறிவிப்பு

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க தேவையில்லை என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க தேவையில்லை - பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அறிவிப்பு
x
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க தேவையில்லை என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளில் மாதாந்திர சாராசரி இருப்பு தொகை வைக்க தேவையில்லை என கூறியுள்ளது. இதன் மூலம் 44 கோடியே 51 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்துள்ளது.   நகர்புற மற்றும் ஊரக வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, 3 ஆயிரம், 2 ஆயிரம், ஆயிரம் ரூபாய் இருப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்கிற விதிகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தினை 3 சதவீதமாகவும் குறைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்