வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை - வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகையொட்டி, ஹோலிகா தகனம் என்னும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை - வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது
x
மங்களூரு : வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்த மாணவர்கள்

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் ஹோலியை கொண்டாடினர்.  

மேற்குவங்கம் : பெண்கள் கொண்டாடிய மலர் ஹோலி  - கோலாட்டம் ஆடி மகிழ்ந்த பெண்கள் 

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் நகரில் ஒரே நிற ஆடையில் திரண்டி பெண்கள், கோலாட்டம் ஆடி மலர் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். பல வண்ணங்களில் உள்ள மலர் இதழ்களை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ந்தனர். 

இமாச்சலபிரதேசம் : வெளிநாட்டினரின் ஹோலி கொண்டாட்டம் 

இமாச்சலபிரதேசம் குலுவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், ஹோலி  கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். வண்ணப்பொடிகளை முகத்தில் பூசிக் கொண்டு, அவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். 

மும்பை : ஹோலிகா தகனம்..அரக்கன் பொம்மை எரிப்பு 

மும்பை மாநகரின் மையப்பகுதியில் நடந்த ஹோலிகா தகனம் நிகழ்ச்சில், அரக்கனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள், அசுர வதத்தை பார்த்து விசில் அடித்து, அதிக சப்தம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பஞ்சாப் : ஹோலிகா தகனம்...உற்சாக கொண்டாட்டம்

பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸிலும் ஹோலிகா தகனம் நிகழ்வு உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது. 

ராஜஸ்தான் : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஹோலிகா

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் ஹெலாட் வீட்டில், நடந்த ஹோலிகா தகனம் நிகழ்வில் ஏராமானோர் பங்கேற்றனர். வசந்தத்தை வரவேற்கும் வகையில், ராஜஸ்தான் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்