கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பெட்ரோல் - டீசல் விலை குறையுமா..?

கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பெட்ரோல் - டீசல் விலை குறையுமா..?
x
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தேவை குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை  வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தையை கைப்பற்றுவதற்காக சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் விலையை குறைத்துள்ளதால், ஒரு பேரல் 34 டாலர் வரை வர்த்தகமாகிறது.1991 ஆம் ஆண்டுக்கு பின் கச்சா எண்ணெய் விலையில் மிகப் பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில் கடந்த சில நாட்களாக ஒரு ரூபாய் 50 காசுகள் வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை, அடுத்த சில நாட்களில் மேலும் குறையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்