யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை, வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது
x
வாராக்கடன் சிக்கல் காரணமாக , யெஸ் வங்கியை  ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வங்கி நிதி விவகாரங்கள் தொடர்பாக, அதன் நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, வங்கியின் நிதிப் பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின.  விசாரணையில், நிதி மோசடிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், ராணா கபூரை கைது செய்த அமலாக்கத்துறை,  மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதையடுத்து, ராணாவை, வரும் 11-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்