370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு - 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு

காஷ்மீரில் 370வது பிரிவு, ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை, 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு - 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு
x
ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள மத்திய அரசு, அந்த மாநிலத்தின் 3 முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்டோரை  வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 23 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை, உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை 7 நீதிபதிகள் அல்லது அதற்கு மேல் நீதிபதிகள் இடம்பெறும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த 23 மனுக்களையும், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்