14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் - சொகுசு விடுதி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

கேரளாவில் 14 வயது சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து 100-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் - சொகுசு விடுதி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
x
இவர்கள் தான், 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள். எட்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் வலையில் வீழ்த்திய அந்த கும்பல்,  போலீஸ் வலையில் சிக்கியது எப்படி...? கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட கக்கடாம்பொயில், ஆறாட்டுப்பாறை, குக்காடி, வைத்திரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இங்குள்ள சில விடுதியில் விபச்சார தரகர்களை கொண்டு, பாலியல் தொழிலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள சொகுசு விடுதியொன்றில், ஒரு கும்பல், 14 வயது சிறுமியை அடைத்து, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் பாலியல் இச்சைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிய அந்த சிறுமி, திருவங்காடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட திருவம்பாடி போலீசார், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வயலூரைச்சேர்ந்த  இலியாஸ், மலப்புரத்தை சேர்ந்த மன்சூர், நிசார் பாபு, வயநாடு சொகுசு விடுதி உரிமையாளர் முகம்மது பஷீர், சிறுமியை அழைத்து வந்த சிக்மகளூரை சேர்ந்த ஹர்சானா ஆகியோரை, திருவம்பாடி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்,கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியை சேர்ந்த ஹர்சானா என்ற பெண், 14 வயது சிறுமியை அழைத்து வந்தது தெரியவந்தது. 

வயநாடு பகுதியில் உள்ள 3 சொகுசு விடுதிகளில் ஒரு மாதம் அடைத்து வைத்துள்ளனர். இந்த சமயத்தில்  100-க்கும் மேற்பட்டோர் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.  இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் பல பெண்களை ஹர்சானா மூலம் கேரளா கடத்தி வரப்பட்டு, அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 

இதையடுத்து இந்த வழக்கு, கோழிக்கோடு மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு, வயநாட்டில், சிறுமி அடைத்து வைக்கப்பட்ட 3 சொகுசு விடுதிகளில் விசாரணையை முடுக்கியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்