"நான் இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது" - நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி கருத்து

இந்தியாவில் இருந்திருந்தால் தனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது என்றும் இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.
நான் இந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது - நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி கருத்து
x
மும்பையில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வரும் அபிஜித் பானர்ஜி, 2019ம் ஆண்டில், பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை வென்றிருந்தார். இந்நிலையில் இந்தியா வந்துள்ள அவர், ஜெய்ப்பூரில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவில், 1990ம் ஆண்டில், வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இருந்திருந்தால் தனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது என கூறிய அவர், அதற்கு இந்தியாவில் திறமையாளர்கள் இல்லை என்று அர்த்தம் அல்ல என்றும் அதற்கான சரியான சிஸ்டம் இங்கு இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்