தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
x
பொதுத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியருடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எந்தவித தயக்கமும், பயமுமின்றி திறந்த மனதோடு உரையாட மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கலந்துரையாடும் போதெல்லாம் தாம் பல விஷயங்களை கற்று கொள்வதாக குறிப்பிட்ட மோடி பிரதமராக பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும், மனதுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சி என்றால், அது மாணவர்களுடன் கலந்துரையாடுவது தான் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் மனம் தளராது இருக்க சில அறிவுரைகள் வழங்கிய மோடி, சந்திரயான் நிகழ்வை சுட்டிக்காட்டி தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.Next Story

மேலும் செய்திகள்