கார் விபத்தில் நடிகை ஷப்னா ஆஸ்மி காயம், மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல இந்தி நடிகை ஷப்னா ஆஸ்மி, கார் விபத்தில் காயமடைந்தார்.
கார் விபத்தில் நடிகை ஷப்னா ஆஸ்மி காயம், மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
பிரபல இந்தி நடிகை ஷப்னா ஆஸ்மி, கார் விபத்தில் காயமடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து மும்பை நோக்கி காரில் சென்றபோது, மும்பை எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் உள்ள காஹல்புர் என்ற இடத்தில், கார் மீது லாரி ஒன்று மோதியுள்ளது. இதில், ஷப்னா ஆஸ்மி மற்றும் அவரது கார் ஓட்டுநர் இருவரும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த ஷப்னா ஆஸ்மிக்கு மும்பை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே காரில் பயணம் செய்து வந்த பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்