2019ல் மட்டும் ரூ.1161.74 கோடி வசூல் - திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்தாண்டில் மட்டும் பக்தர்கள் ஆயிரத்து 161 புள்ளி 74 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்தாண்டில் மட்டும் பக்தர்கள் ஆயிரத்து 161 புள்ளி 74 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 2018ஆம் ஆண்டைவிட 95 புள்ளி இரண்டு ஐந்து கோடி கூடுதலாக உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் செயல் அலுவலர் அணில்குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு மட்டும் 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்கு அறைகள் வாடகை விடப்பட்டதன் மூலம் 83 புள்ளி 71 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Next Story