கர்னூல்: பிரசவத்தில் தலை துண்டான குழந்தை - மருத்துவர்களின் கவனக்குறைவு என குற்றச்சாட்டு

ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்னூல்: பிரசவத்தில் தலை துண்டான குழந்தை - மருத்துவர்களின் கவனக்குறைவு என குற்றச்சாட்டு
x
நடிம்பள்ளியைச் சேர்ந்த சாவித்திரி என்பவருக்கு அச்சம்பேட்டை மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது, தாயின் உடலில் இருந்து பிரிந்த குழந்தையின் தலை துண்டாக வெளியே வந்ததாக கூறப்படுகிறது. உடல் பகுதி தாயின் வயிற்றுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது. நிலைமை குறித்து, மருத்துவர்கள் சாவித்திரியின் உறவினர்களிடம் விளக்கம் அளித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையில் உள்ள பொருட்களை சூறையாடி, மருத்துவரிடம் வாக்குவாதம் செய்தனர். சமாதானம் பேச வந்த போலீசாரையும் உறவினர்கள் தாக்கினர். பின்னர் ஒரு வழியாக அந்த பெண்ணின் உறவினர்கள் சமரசமானதை தொடர்ந்து, மருத்துவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில் நடந்தது போல், கர்னூலிலும் பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்