டெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில், ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில், ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை எந்த சூழ்நிலையும் அனுமதிக்கக்கூடாது என வலி​யுறுத்தி  கோஷங்கள் எழுப்பினர்.  தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி அனைத்து  மாவட்டங்களிலும், ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து மாபெரும்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்