அயோத்தி வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
அயோத்தி வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலத்தின் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய நீதிபதிகள்  முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை பெரும்பாலானோர்  ஏற்றுக்கொண்ட நிலையில்  சில பிரிவினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அகில பாரத இந்து மகாசபா, உத்தரபிரதேச ஜாமியத் உலமா இ-ஹிந்த் தலைவர் உள்ளிட்டோர் என 18 மனுக்கள்  தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், உச்சநீதிமன்றம் இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் விசாரிக்கின்றனர்.
இதில் நீதிபதி சஞ்சீவ் கன்னாவை தவிர மற்ற 4 பேரும் கடந்த 9-ந்தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்று இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்