டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாட்டின் பல நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
பதிவு : டிசம்பர் 02, 2019, 08:18 AM
பிரியங்கா ரெட்டி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் தொடரும் நிலையில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க தெலுங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில்  கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த 27 வயது பெண் பிரியங்கா ரெட்டி கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே அவரின் இருசக்கர வாகனம் பழுதானது. அப்போது உதவுவது போல நடித்த இளைஞர்கள் அவரை பாலியல் கூட்டுவன்கொடுமை செய்ததுடன், படுகொலையும் செய்தனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்கி வந்த அந்த இளைஞர்கள் பிரியங்கா ரெட்டி உடலை பாலம் ஒன்றின் கீழ் எரித்தனர்.  

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து விசாரணையில் இறங்கிய சாத்நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். 

லாரி ஓட்டுனர்கள் முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலையான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நீதிகேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

விஜயவாடாவில் திரண்ட இளைஞர்களும், இளம்பெண்களும் போராட்டம் நடத்தினர். சிறுமிகளை காப்போம், பெண்களை காப்போம் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய அவர்கள் முழக்கமிட்டவாறு ஊர்வமாக சென்றனர். 

ஐதராபாத்தில் மக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். 

லக்னோவில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து பிரியங்கா ரெட்டி படுகொலைக்கு நீதி கேட்டு முழக்கமிட்டனர்.

மும்பையில் ஒன்றுகூடிய மக்கள் மெழுவர்த்தி ஏந்தியவாறு பிரியங்கா ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தினர். 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மவுனம் கலைத்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை சம்பவம் - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை பொதுமக்கள் சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

1432 views

பிற செய்திகள்

கோவை: காதலனுடன் சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை

காதலனுடன் பிறந்த நாள் கொண்டாட பூங்காவிற்கு சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

453 views

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? - தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

232 views

"பிரியங்கா காந்திக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா?" - காங்கிரஸ் நிர்வாகி முழக்கத்தால் சலசலப்பு

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சுரேந்தர் என்ற நிர்வாகி பிரியங்கா சோப்ரா வாழ்க என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

16 views

"மோடி அரசை விமர்சிக்கும் தைரியம் தொழிலதிபர்களுக்கு இல்லை" - ராகுல் பஜாஜ்

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை விமர்சிக்க பயமாக இருக்கிறது என அமித்ஷா முன்னிலையில் பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

51 views

திருச்செந்தூர்: மழையால் இடிந்து விழுந்த களிமண் வீடு

கனமழை காரணமாக திருச்செந்தூர் அருகே தோப்பூரில் சந்தனக்குமார் என்பவரின் களிமண் வீடு இடிந்து விழுந்தது.

16 views

தூத்துக்குடி : மழை நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார் கனிமொழி

தூத்துக்குடியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அத்தொகுதி எம்.பி. கனிமொழி நேரில் பார்வையிட்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.