திருப்பதி : செம்மரங்களை வெட்டிக் கடத்திய 10 பேர் கைது

திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டி கடத்திய வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 10 பேரை அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி : செம்மரங்களை வெட்டிக் கடத்திய 10 பேர் கைது
x
திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டி கடத்திய வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 10 பேரை அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரக்கட்டை கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, திருப்பதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேஷாசல வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி   பெருமாளாப்பள்ளி என்ற இடத்தில் பதுங்கியிருந்த கடத்தல்காரர்களை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த 10 பேரிடமும் விசாரணை நடத்தி, 10 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்