புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி தமிழகத்தில் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது - நாடாளுமன்றத்தில் நிதின்கட்கரி தகவல்

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி நாட்டிலேயே தமிழகத்தில் மிக அதிகமாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி தமிழகத்தில் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது - நாடாளுமன்றத்தில் நிதின்கட்கரி தகவல்
x
உறுப்பினரின் கேள்வி ஒன்றிற்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் இதுவரை 38 லட்சத்து 39 ஆயிரத்து 406 அபராத சலான்கள். விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இவற்றில் தமிழகத்தில் மொத்தம் 14 லட்சத்து 13 ஆயிரத்து 996 அபராத சலான்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கு அடுத்தபடியாக  உத்தரபிரதேசத்தில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 326 சலான்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தவறாத செலவினங்களின் மொத்த தொகை  27 கோடியே 75 லட்சத்து 61 ஆயிரத்து 250 ரூபாய் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்