ஃபேஸ்புக் மூலம் பெண் போல பழகி ரூ.37 லட்சம் மோசடி : நைஜீரியர் உள்பட 2 பேர் கைது

விசாகப்பட்டினத்தில் ஃபேஸ்புக் மூலம் பெண் போல் பழகி, 37 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் மூலம் பெண் போல பழகி ரூ.37 லட்சம் மோசடி : நைஜீரியர் உள்பட 2 பேர் கைது
x
விசாகப்பட்டினத்தில் ஃபேஸ்புக் மூலம் பெண் போல் பழகி, 37 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய விசாகப்பட்டினம் காவல் ஆணையர் வெளிநாட்டு பரிசுப்பொருளை பெற்றுத்தருவதாக, குமார் தாஸ் என்கிற ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரிடம், ஃபேஸ்புக் மூலம் மோசடி நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார். குமார் தாஸ் அளித்த புகாரின் பேரில்,  ஹரியானாவை சேர்ந்த ஒருவரும், நைஜீரியாவை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 150 சிம்கார்டுகள் , 9 பாஸ்போர்ட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கும்பல் நாடு முழுவதும் பலரை ஏமாற்றி உள்ளதாகவும் காவல் ஆணையர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்