ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரயில் சேவை : 3 மாதங்களுக்கு பின்னர் நாளை மீண்டும் தொடங்க உள்ளது

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  ரயில் சேவை : 3 மாதங்களுக்கு பின்னர் நாளை மீண்டும் தொடங்க உள்ளது
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது. இதனையொட்டி ரயில் பாதையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியும், தண்டவாள பராமரிப்பு பணிகளையும் ரயில்வே ஊ​ழியர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் ரயில்களை சோதனை முறையில் இயக்கியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்