"ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம்" - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று தெரிவித்தார்
ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம் - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து
x
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று தெரிவித்தார். ராம பக்தியாக இருந்தாலும், ரஹீம் பக்தியாக இருந்தாலும், தேச பக்தியை வலுப்படுத்துவதே முக்கியம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, அமைதியும் நல்லிணக்கமும் ஓங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்த பிரதமர் மோடி, இதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சட்டரீதியாக தீர்வு காண முடியும் என்பது தெளிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நமது சட்ட அமைப்பின் சுதந்திரத்தையும், வெளிப்படை தன்மையையும், தொலைநோக்கு பார்வையையும் இந்த தீர்ப்பு உணர்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் ஒரு முறை உணர்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார் . அனைத்து தரப்பினருக்கும் அவர்களுடைய தரப்பு நியாயங்களை முன் வைக்க தேவையான நேரம் அளிக்கப்பட்டதாகவும், இந்த தீர்ப்பு சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 130 கோடி இந்தியர்களால் கடைபிடிக்கப்பட்ட அமைதி, இந்தியர்கள் நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் என்பதை காட்டியுள்ளது என்றும், இந்த ஒற்றுமை எண்ணம் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்லும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்