இரிடியம் தருவதாக கூறி பலரிடம் பணம், நகை மோசடி: 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கொடூரம்

ஆந்திர மாநிலத்தில் சக்தி வாய்ந்த இரிடியம் தருவதாக கூறி சொந்த பாட்டி உட்பட 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இரிடியம் தருவதாக கூறி பலரிடம் பணம், நகை மோசடி: 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கொடூரம்
x
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூர் என்டிஆர் காலனியை சேர்ந்தவர் சிம்மாத்திரி என்கிற சிவா. ஆரம்ப காலத்தில் 
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவருக்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடனாளியான சிவா , பிழைக்க வழியில்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்ச் மேனாக வேலை செய்து வந்துள்ளார். 
தனக்கு  சில அபூர்வ சக்திகள் இருப்பதாகவும், அதன் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறிய சிவா, பணம், தங்கம் கொடுத்தால் சக்தி வாய்ந்த இரிடியம் கொடுப்பதாக பலரை நம்ப வைத்து 
ஏமாற்றி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சிவா,  தனது பாட்டி உள்ளிட்ட மூன்று பெண்கள் மற்றும் 7 ஆண்களிடம் பணம், நகைகளை பறித்து  அவர்களுக்கு சயனைடு கலந்த பிரசாதத்தை கொடுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஏழூரை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் 2 லட்ச ரூபாய்  மற்றும் நகைகளை சிவா, அபகரித்து கொண்டு, செல்வம், புகழ் கிடைக்கும் என்று கூறி சயனைடு கலந்த பிரசாதம் மற்றும் தங்க நாணயத்தை கொடுத்துள்ளார். சயனைடு பிரசாததத்தை  சாப்பிட்ட  நாகராஜ் திடீரென உயிரிழந்ததால் சந்தேகமடைந்த  உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.நாகராஜ் உடலை  உடற்கூறு ஆய்வு செய்ததில், அவர் சயனைடால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்த போது  கடைசியாக சிவாவுடன் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் சிவாவை பிடித்து விசாரித்த போது 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்து அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. சிவாவை கைது செய்த போலீசார், சயனைடு கொடுத்து வந்த  ஷேக் அப்துல்லா என்பவையும் கைது செய்தனர். சிவாவிடமிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ,30 கிராம் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்