பி.எஸ்.என்.எல். விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்:விண்ணப்பிக்க டிசம்பர் 3 ஆம் தேதி வரை வாய்ப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் உள்ள நிலையில் ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்:விண்ணப்பிக்க டிசம்பர் 3 ஆம் தேதி வரை வாய்ப்பு
x
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் உள்ள நிலையில் ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சம்பள செலவை 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைக்க முடியும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் கணித்துள்ளது. இதற்காக கடந்த 4 ஆம் தேதி முதல் விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள் என பி.எஸ்.என்.எல். தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விருப்பு ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பணி முடித்த ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியமும், எஞ்சிய பணிக்காலத்திற்கு ஆண்டுக்கு 25 நாட்கள் ஊதியமும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குஜராத் மாடல் திட்டமான இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை எம்.டி.என்.எல்.நிர்வாகமும் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்