டெல்லியில் தீவிரமடையும் போலீஸ் போராட்டம்

டெல்லியில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
டெல்லியில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி காவல்துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் திரண்டு வந்து, பல மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற பிரச்சினையில் துணிச்சலாக செயல்பட்ட கிரண்பேடி போன்ற போலீஸ் அதிகாரி தேவை என கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் பேசிய காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக், அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், டெல்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போலீசாரை துணை நிலை ஆளுநர் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்