ஏழுமலையான் கோவில் வருடாந்திர புஷ்ப யாகம் : 7 டன் மலர்களால் உற்சவருக்கு புஷ்ப யாகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களை கொண்டு வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.
ஏழுமலையான் கோவில் வருடாந்திர புஷ்ப யாகம் : 7 டன் மலர்களால் உற்சவருக்கு புஷ்ப யாகம்
x
திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில்  ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்ப யாகத்தை  முன்னிட்டு, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி என 27 ரகமான மலர்களால் உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படும். இந்த யாகத்திற்காக 7 டன் எடையுள்ள பூக்களை தமிழகத்தை சேர்ந்த பக்தர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிலையில் நெய்வேத்தியத்திற்கு பிறகு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கல்யாண உற்சவ மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பால், தயிர், இளநீர் மஞ்சள், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டு பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்ப யாகம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்