டெல்லியில் காற்று மாசு அபாயம் - 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித்துள்ளது.
x
டெல்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு வரும் ஐந்தாம் தேதி வரை விடுமறை அளிக்கப்படுவதாக முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், டெல்லியில், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அங்கு வரும் ஐந்தாம் தேதி வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும், பட்டாசு மற்றும் மத்தாப்புகள் வெடிக்கவும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. காற்று மாசு அதிகரிப்பதால், பொது சுகாதார அவசர நிலை என்றும் அறிவிப்க்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்