ஹரியானா தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரம்

இரு மாநில தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வதால், ஹரியானாவில், பிரதமர் நரேந்திரமோடி, இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஹரியானா தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரம்
x
இரு மாநில தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வதால், ஹரியானாவில், பிரதமர் நரேந்திரமோடி, இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அம் மாநிலத்தின் சிர்சா என்ற நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி நடந்து கொள்வதாக பிரதமர் மோடி, குற்றஞ்சாட்டினார். ஹரியானா மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திரமோடி, பிரசாரம் செய்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்