ஹரியானா முதலமைச்சரோடு தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரை அம்மாநில தமிழ் சங்க நிர்வாகிகள் சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஹரியானா முதலமைச்சரோடு தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
x
ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு, வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி, பாஜகவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  குருகிராம் மற்றும் சண்டிகர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், முதலமைச்சர் கட்டாரை நேரில் சந்தித்து, பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது பஞ்ச்குலா பகுதியில் வாழும் தமிழர்களுக்கு மனைப் பட்டா பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஹரியானா முழுவதும் ஏறத்தாழ 80 ஆயிரம் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்