அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கண்டிகனூரு என்ற பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஓட்டுனரை ஒருவர் தாக்கினார், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
x
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கண்டிகனூரு என்ற பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து  சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் வந்த காருக்கு வழி விடாமல் பேருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்தை முந்திச் சென்ற காரில் இருந்தவர்கள், அரசு பேருந்தை நிறுத்தி தகராறு செய்தனர். அப்போது வாக்குவாதம் முற்றியதால்  ஓட்டுனரை ஒருவர் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த பேருந்தில் வந்த பயணிகள் குடி போதையில் இருந்த நான்கு பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்