கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை: ரூ.20 கோடி பறிமுதல் - சிக்கியது ரூ.150 கோடி ஆவணம்..?

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை: ரூ.20 கோடி பறிமுதல் -  சிக்கியது ரூ.150 கோடி ஆவணம்..?
x
 வரி ஏய்ப்பு புகார் எழுந்ததால், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்திற்கு தமிழகத்தில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். கல்கி ஆசிரமத்தின் சாமியார் விஜயகுமார் என்ற கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா, மருமகள் பித்ரா, ஆசிரமத்தின் துணைத்தலைவர் லோகேஷ் தாசா ஆகியோரை தனித்தனி அறைகளில் அமர வைத்து, விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உள்பட ஒரே நேரத்தில், 40 இடங்களில், வருமான வரி சோதனை பல மணி நேரம் நீடித்தது. 

Next Story

மேலும் செய்திகள்