கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை - ரூ.100 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு என தகவல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
x
சாதாரண எல்.ஐ.சி. முகவராக வாழ்க்கையை தொடங்கிய  விஜயகுமார் என்பவர், தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் புராணங்களில் சொல்லப்பட்ட கல்கி அவதாரம் தானே என்று கூறி ஆசிரமம் அமைத்து பெருமளவில் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை தொடர்ந்து, கல்கி ஆசிரமம் தொடர்பான தகவல்கள் பொது வெளியில் வராத நிலையில், தற்போது மீண்டும் வெளிச்சத்துக்கு கல்கி அறக்கட்டளை நடவடிக்கை வந்துள்ளது. 100 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டதான புகாரில், நாடு முழுவதும் உள்ள கல்கி  ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகா​லை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரதய்ய பாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்திற்கு தமிழகத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு  குழுக்களாக பிரிந்து ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரம நிறுவனர் விஜயகுமார்  மகன் கிருஷ்ணா, அவரது மனைவி பித்ரா, துணைத் தலைவர் லோகேஷ் தாசா ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்