ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், முதலைக்கண்ணீர் வடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21 ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிரசாரம் களை கட்டியுள்ளது. ஜால்கௌன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி , மக்களவை தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக குற்றம் சாட்டிய ,  பிரதமர் மோடி, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட தயாரா என்று எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார். இதை செய்ய எதிர்க்கட்சிகளுக்கு சக்தி உண்டா என்றும்,  நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா என்றும்  பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் நிலப்பகுதி இந்தியாவின் மகுடம் போன்றது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  மகாராஷ்டிராவை முன்னோக்கி அழைத்து செல்வதில் பாஜகவுக்கு  வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெண்கள் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில்  அரசின் பல  திட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்