உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா - விழாக்கோலம் பூண்டது, மைசூரு நகரம்
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா
x
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான அக்டோபர் 8ஆம் தேதி ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோயில்களில் சிறப்பு பூஜை, விளக்குகளால் ஜொலிக்கும் அரண்மனை என மைசூரு நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. உலகமெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த மைசூரு தசரா விழாவை காண வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்