ஒரு நாள் பள்ளியாக மாறிய வயல்வெளி : மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி

கேரளாவில், விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒரு நாள் பள்ளியாக மாறிய வயல்வெளி : மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி
x
விவசாயிகளின் கை முடங்கினால், பற்றை துறந்த துறவிகளுக்கு கூட வாழ்க்கை இல்லை என்பார் வள்ளுவர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்து விவசாயம், அசூரத்தனமான ரியல் எஸ்டேட் வளர்ச்சியால், அழிவின் விளம்பில் உள்ளது. வெள்ளாமை குறைந்து, காடு கழனியெல்லாம் கட்டடமாக மாறி வருகிறது. உழவின் அழிவை உணர்ந்த கேரள கல்வி மற்றும் வேளாண் துறை இளைய தலைமுறைகளுக்கு விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள 480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வயல் வெளிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நெல் நாத்து நடவு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பள்ளிகளில் 60 வகையான நெல் விதைகள், விவசாய உபகரணங்கள் ஆகியவை உள்ளடக்கிய கண்காட்சியும் நடந்தது. மிகவும் ஆர்வமுடன் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இது போன்ற முன் முயற்சிகளால், விவசாயம் அழிவில் இருந்து மீளும் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

Next Story

மேலும் செய்திகள்