"சுதந்திரம் உள்ளிட்ட எதற்கும் போராடாத கட்சி பா.ஜ.க." - சீதாராம் யெச்சூரி

மதரீதியில் மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக, சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டி உள்ளார்.
சுதந்திரம் உள்ளிட்ட எதற்கும் போராடாத கட்சி பா.ஜ.க. - சீதாராம் யெச்சூரி
x
மதரீதியில் மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக, சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டி உள்ளார். தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து தியாகராய நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சுதந்திரப் போராட்டம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட எந்த பிரச்சனைக்காகவும் பா.ஜ.க. போராட்டம் நடத்தியதில்லை என்றார். விடுதலை போராட்டத்திற்காக போராடி அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்தினர் கம்யூனிஸ்ட் கட்சியினர் என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடம் பிளவை ஏற்படுத்த தான் என்று குற்றம்சாட்டினார். காஷ்மீர் மக்களை அடிமைகள் போல நடத்துவதாக, குலாம் நபி ஆசாத் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவிடம் மக்கள் கூறியதாக தெரிவித்த சீதாராம் யெச்சூரி, இந்துத்துவாவை புகுத்த மோடி அரசு முழுமையாக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மோடி அரசுக்கு கவலையில்லை என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு என்று ஒன்றை தயாரித்து மக்களிடையே பா.ஜ.க. அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்