மத்திய பிரதேசம் : சுங்கச் சாவடி ஊழியருக்கு சரமாரி அடி, உதை - பாஜக பிரமுகர், ஆதரவாளருக்கு போலீஸ் வலைவீச்சு

மத்திய பிரதேச மாநிலத்தில், சுங்கச் சாவடி ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேசம் : சுங்கச் சாவடி ஊழியருக்கு சரமாரி அடி, உதை - பாஜக பிரமுகர், ஆதரவாளருக்கு போலீஸ் வலைவீச்சு
x
மத்திய பிரதேச மாநிலத்தில், சுங்கச் சாவடி ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகா காளேஸ்வர் அருகே உள்ள சுங்கச் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த பா.ஜ.க. பிரமுகர் நரேந்திர சிங் பவார், அவரின் ஆதரவாளர் சேகர் சிங் பவார் ஆகிய இருவரும் சுங்கச் சாவடிக்குள் நுழைந்து ஊழியரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்