நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் - வேகமாக பைக்கில் சென்ற நபரை பிடித்த போலீசார்

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் பைக்கில் வேகமாக நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் - வேகமாக பைக்கில் சென்ற நபரை பிடித்த போலீசார்
x
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் பைக்கில் வேகமாக நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நபரை லாவகமாக சுற்றி வளைத்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் கத்தி உள்ளிட்ட ஆயுதம் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரை, நாடாளுமன்ற காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியான தேரா சச்சா சவுதா அமைப்பின் குர்மீத் ராம் ரஹீமின், சீடர் சாகர் இன்சா என்பதும், டெல்லி லட்சுமி நகரில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்