புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம்: அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம்: அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல்
x
பேரவைக் கூட்டத்தின்போது மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மனோகர் பாரிக்கர், பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஷ்ரா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் உரை மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அவர் எப்படி நடுநிலையோடு செயல்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, 14 நாள் அவகாசம் உள்ள நிலையில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். ஆனால் இந்த விவகாரத்தில் சரியான பதில் அளிக்கவில்லை என கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்