காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற பாக். எடுத்த முயற்சி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வி அடைந்தது.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற பாக். எடுத்த முயற்சி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி
x
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்ட பிரிவுகளை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க்கப்படும் என்று அறிவித்து, அதற்கான சட்ட மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான ரயில் ,பேருந்து போக்குவரத்தை ரத்து செய்து தூதரக உறவையும் துண்டிக்க முயற்சி மேற்கொண்டது. 

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. 5 உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய பிரிதிநிதி 
டிமிட்ரி போலென்ஸ்கி காஷ்மீர்  விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேசி தீர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். 

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி அடைந்ததாக ஐ.நாவுக்கான இந்தியா துாதர் சையது அக்பரூதீன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவளித்ததாகவும், சீனாவின் நிலைப்பாட்டிற்கு உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் சையது அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்