"தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்"- குடியரசு தலைவர்

73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கவிஞர் சுப்ரமணிய பாரதியின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டு பேசினார்.
தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்- குடியரசு தலைவர்
x
சுதந்திர தேசம் என்ற முறையில், 72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நாம், மிகவும் தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மிகுந்த பயனை அளிக்கும் என தாம் நம்புவதாகவும், நாட்டின் பிற பகுதியில் உள்ள குடிமக்கள் பெறும் உரிமைகளை, சலுகைகளை, காஷ்மீர் மக்களும்  பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார். முற்போக்கான, சமத்துவமான சட்டங்கள்; கல்வி உரிமை தொடர்பான அம்சங்கள், முத்தலாக் போன்ற பாரபட்சமான நடைமுறை ஒழிக்கப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

100 ஆண்டுக்கு முன்பு கவிஞர் சுப்ரமணிய பாரதி நமது விடுதலை இயக்கத்திற்கும், அதன் விரிவான இலக்குகளுக்கும் கவிதை வரிகள் மூலம்,  மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம். வானையளப்போம் கடல் மீனையளப்போம். சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம். சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என குரல் கொடுத்துள்ளார் எனவும் குடியரசுத் தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்