நிவாரண முகாமில் மக்களை சந்தித்து பினராயி விஜயன் ஆறுதல்
கேரள மாநிலம் வயநாட்டில், நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆறுதல் கூறினார்.
கேரள மாநிலம் வயநாட்டில், நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆறுதல் கூறினார். வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள நிவாரண முகாமில் மக்களை சந்தித்த அவர், அனைத்து பிரச்னைகள் மற்றும் சிரமங்களையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம் என நம்பிக்கை அளித்துள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் மேற்கொள்ள அரசு துணை நிற்கும் என்றும் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.
Next Story

