மழையின் வேகம் குறைந்தது-இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா : மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரம்

கேரள மாநிலத்தில், மழையின் வேகம் குறைந்து வெள்ளம் வடிய துவங்கியுள்ளதால், முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
மழையின் வேகம் குறைந்தது-இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா : மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரம்
x
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 89 பேர் பலியான நிலையில், 
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மாயமான 59 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலப்புறம் மாவட்டம் கவளப்பாறை மண்சரிவில் சிக்கியவர்களில் 19 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரத்து 326 முகாம்களில் இரண்டரை லட்சம் பேர் தங்கியுள்ள நிலையில்,
மழையின் வேகம் குறைந்து வெள்ளம் வடிய துவங்கியுள்ளது. இதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ஆலப்புழை, எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் கோட்டயம், கண்ணூர், திருச்சூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்