"வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்" - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
புதுச்சேரி அருகே  அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய  அரிக்கமேடு பகுதியில் 1937-ஆம் ஆண்டு ழுவோ துய்ப்ரேய் என்ற பிரெஞ்ச்  பேராசிரியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரோமானிய கால மட்பாண்டங்கள், நாணயங்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து அவர் சேகரித்தார். சுமார் 2300ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்களின் வணிக பகுதியாக  அரிக்கமேடு திகழ்ந்ததாக கூறப்படுகிறது. கீழடி போன்று வரலாற்று சிறப்பு மிக்க அரிக்கமேடு பகுதியில்  மத்திய, மாநில அரசுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்