காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணம் : திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான இரா. அன்பரசு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணம் : திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
x
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரா. அன்பரசின் உயிர், மாலையில் பிரிந்தது.  பூந்தமல்லியில் உள்ள  இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அன்பரசின் உடல் வைக்கப்பட்டு உள்ளது.  காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு காட்டுப்பாக்கத்தில் உள்ள மின்சார சுடுகாட்டில் அன்பரசின் இறுதிசடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்