திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம் : பட்டு வஸ்திரங்களை வழங்கும் முதலமைச்சர் ஜெகன்மோகன்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்  : பட்டு வஸ்திரங்களை வழங்கும் முதலமைச்சர் ஜெகன்மோகன்
x
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தர்மா ரெட்டி, ஒன்பது நாட்கள் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவ  விழாவில் ஏழுமலையானின் மூலவர் தரிசனம் மற்றும் வாகன சேவையை காணவரும் பக்தர்களுக்கு 
சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக 3 ஆயிரத்து 500 ஸ்ரீவாரி சேவகர்கள் மற்றும் ஆயிரம் சாரண சாரணியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். கருட சேவை நடைபெறக்கூடிய அக்டோபர் 4ம் தேதி இரவு 7 மணிக்கு வாகன சேவை தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக தெப்பக் குளத்தில் உள்ள தண்ணீர் அகற்றப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது தெப்பக் குளத்தில் உள்ள தண்ணீரை சோதனை செய்ததில் அவை நன்றாக இருப்பது தெரியவந்துள்ளதால் தண்ணீரை வெளியேற்றி நிரப்பும் பணி இந்த ஆண்டு நடக்காது. பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.... 

Next Story

மேலும் செய்திகள்