5- வது புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது, சந்திரயான் - 2

சந்திரயான் - 2 விண்கலம், 5- வது புவி வட்ட பாதைக்கு,வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.
5- வது புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது, சந்திரயான் - 2
x
சந்திரயான் - 2 விண்கலம், 5- வது புவி வட்ட பாதைக்கு,வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஜூலை 22 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் - 2  நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இருக்கிறது. முன்னதாக, இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்ட பாதையில் உயர்த்தப்பட்டு, நிலவின் வட்ட பாதையை சென்றடையும். இதற்காக ஏற்கனவே, 4 முறை வட்ட பாதை உயர்த்தப்பட்டிருந்த சூழலில், நேற்று பிற்பகல் 3.04 மணிக்கு, சந்திராயன் 2 விண்கலம், 5 வது மற்றும் கடைசி புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தின் தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இதனை வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், எதிர்பார்த்த படி, அனைத்து பணிகளும் சிறப்பாக நடப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 


Next Story

மேலும் செய்திகள்