காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
x
ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி இதனை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஐம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில்  குவிக்கப்பட்டுள்ளதுடன், தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என அம்மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மாநிலத்தை மூன்றாக பிரிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நடவடிக்கைகளால், காஷ்மீர் மக்களிடையே அச்சம் நிலவும் நிலையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அமைதி காக்குமாறும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் எச்சரிக்கையை அரசியல்வாதிகள் பெரிதாக்க வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டு அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்