"அணை பாதுகாப்பு மசோதா இறுதி செய்யப்பட்டது" - அமைச்சர் கஜேந்திர சிங்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு அளித்திருப்பதாக, மக்களவையில், ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம்,  கேரளா தவிர பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு அளித்திருப்பதாக, மக்களவையில், ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர், அணை பாதுகாப்பு மசோதா குறித்த கருத்துக்களை அறிய, பல்வேறு மாநிலங்களுக்கு, இது குறித்த கோப்புகளை அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். கேரளாவில் உள்ள அணைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும், பொதுவான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதால், புதிய சட்டம் தேவையில்லை என, அம்மாநில அரசு கூறியதாக மக்களவையில் அவர் தெரிவித்தார். மாநிலங்களின் கருத்துக்கள், குறைகள் பற்றி, ஆலோசனை நடத்தி சில மாற்றங்கள் கொண்டு வந்து, அணை பாதுகாப்பு மசோதா இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்